ரசிகர்களுக்கு போர் அடிக்காதா?....கவர்ச்சியாக நடிக்க தயார் - அனுபமா
|ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் போர் அடிக்கும், ரசிகர்களுக்கும் போர் அடிக்கும் என்று அனுபமா கூறினார்.
சென்னை,
தமிழில் தனுஷ் ஜோடியாக 'கொடி', ஜெயம் ரவி ஜோடியாக 'சைரன்' படங்களில் நடித்து பிரபலமான அனுபமா, தற்போது தெலுங்கில் தயாரான 'டில்லு ஸ்க்வேர்' படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தும் நெருக்கமாக நடித்தும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
கவர்ச்சியாக நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்து அனுபமா கூறும்போது, "மூன்று ஆண்டுகளாகவே நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன்.
எனது கெரியர் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக செய்த கேரக்டர்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் போர் அடிக்காதா? உங்களுக்கு பிரியாணி இஷ்டம் என்பதற்காக வீட்டில் தினமும் பிரியாணியையே சாப்பிடுவீர்களா? இல்லை அல்லவா.
அதேபோல்தான் நான்கூட. எனக்கு வித்தியாசமான உணவு வேண்டும். புளியோதரையும் வேண்டும். விதவிதமான ஐட்டங்கள் எல்லாம் வேண்டும்.
ஒரு நடிகைக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் போர் அடிக்கும், ரசிகர்களுக்கும் போர் அடிக்கும். எனக்கு வரும் கதை, கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க தயார்'' என்றார்.