< Back
சினிமா செய்திகள்
குடிபோதையில் படப்பிடிப்பில் உளறினேன் - நடிகர் விஜய் தேவரகொண்டா
சினிமா செய்திகள்

"குடிபோதையில் படப்பிடிப்பில் உளறினேன்" - நடிகர் விஜய் தேவரகொண்டா

தினத்தந்தி
|
3 Aug 2022 7:40 AM IST

“குடிபோதையில் படப்பிடிப்பில் உளறினேன்” என நடிகர் விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்த டியர் காமரேட் படம் தமிழிலும் வந்தது.

தற்போது இந்தியில் லைகர், தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தன்னை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் விஜய்தேவரகொண்டா தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் போதையில் இருந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து விஜய்தேவரகோண்டா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு பிறந்தநாள் விழா விருந்துக்கு சென்று நன்றாக குடித்து விட்டு வந்தேன். காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன்.

படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டி இருந்தது. இதனால் எனக்கு போதை அதிமாகிவிட்டது. வசனம் சொல்ல மறந்து உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போல் சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர்" என்றார்.

மேலும் செய்திகள்