< Back
சினிமா செய்திகள்
போதைப் பழக்கம் மனநலத்தை பாதிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது - விஜய் ஆண்டனி
சினிமா செய்திகள்

'போதைப் பழக்கம் மனநலத்தை பாதிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது' - விஜய் ஆண்டனி

தினத்தந்தி
|
25 Jun 2023 7:12 PM IST

போதைப் பழக்கத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

சென்னை,

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் நாளை(ஜூன் 26) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "இளைஞர்கள் போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, கடைசியில் சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப் பழக்கம் மனநலத்தை பாதிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. எனவே இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.



மேலும் செய்திகள்