< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முதல் நாளில் ரூ.10.26 கோடி வசூலித்த 'ட்ரீம் கேர்ள் 2'...!!!
|26 Aug 2023 5:25 PM IST
ஆயுஷ்மான் குரானா-அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான ‘ட்ரீம் கேர்ள் 2’ படம் முதல் நாளில் ரூ.10.26 கோடி வசூலித்து உள்ளது.
மும்பை,
கடந்த 2019-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம், 'ட்ரீம் கேர்ள்'. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. எனவே இதன் தொடர்ச்சியாக தற்போது 'ட்ரீம் கேர்ள் 2' படமாக்கப்பட்டு, நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தை ராஜ் ஷாண்டில்யா இயக்கி உள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா ஜோடியா அனன்யா பாண்டே நடித்துள்ளார். இவர்களுடன் பரேஷ் ராவல், அன்னு கபூர், ராஜ்பால் யாதவ், விஜய் ராஸ், அஸ்ரானி உள்பட பலரும் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 'ட்ரீம் கேர்ள் 2' படம், முதல் நாளில் ரூ.10.26 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் அதிகமாக வசூலித்த ஆயுஷ்மான் குரானாவின் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.