ஓவியம் வரையுங்கள்: அமலாபாலின் வைரல் புகைப்படம்...!
|நடிகை அமலா பால் இன்ஸ்டாவில் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
சென்னை,
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அமலா பால் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கடைசியாக ஏப்.29இல் பதிவிட்டிருந்த அமலாபால் சுமார் 11 வாரங்களுக்கு பிறகு கடந்த வாரம் முதல் மீண்டும் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர தொடங்கியுள்ளார்.
தற்போது நீலகிரியிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிறத்தினாலான உடையை அணிந்து புலிகள் போல போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து சிவப்பினால் ஓவியம் வரையுங்கள் என தலைப்பிட்டுள்ளார். ரசிகர்கள் டார்சான் போல் உள்ளதெனவும் தீயாக இருக்கிறதெனவும் கமெண்ட்டுகளில் கருத்துகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.