< Back
சினிமா செய்திகள்
விஜய் சத்யா நடிக்கும் ஆக்சன், திரில்லர் படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சினிமா செய்திகள்

விஜய் சத்யா நடிக்கும் ஆக்சன், திரில்லர் படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தினத்தந்தி
|
12 Sept 2024 12:37 PM IST

இந்த படத்தில் விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடித்துள்ளார்.

சென்னை,

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'தில் ராஜா'. இந்த படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி ரசிகராக நடிக்கும் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி சிறப்பாக நடித்திருக்கிறார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்துள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மேலும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், மூக்குத்தி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, கில்லாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கடேஷ் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் 'சாமி குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில், பிவிஆர் ஜநாக்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை இம்மாதம் திரையரங்குகளில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்