< Back
சினிமா செய்திகள்
திரிஷா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு... ஓடிடியில் வெளியாகும் தி ரோடு திரைப்படம்...!
சினிமா செய்திகள்

திரிஷா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு... ஓடிடியில் வெளியாகும் 'தி ரோடு' திரைப்படம்...!

தினத்தந்தி
|
7 Nov 2023 12:43 PM IST

நடிகை திரிஷா நடிப்பில் கடந்த மாதம் 6-ஆம் தேதி 'தி ரோடு' திரைப்படம் வெளியானது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தடிகை திரிஷா. இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த 'லியோ' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நடிகை திரிஷா சமீபத்தில் இயக்குனர் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கடந்த மாதம் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 10-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்