< Back
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள்

Image courtecy:instagram@divyabharathioffl

சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள்

தினத்தந்தி
|
12 May 2024 9:31 AM IST

திவ்ய பாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்ய பாரதி. 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அவர் கிளாமராக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், முத்தக்காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார். அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

திவ்யாபாரதி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்