விவாகரத்து பெற்றதை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய நடிகை
|விவாகரத்து பெற்றதை கொண்டாடிய நடிகை ராக்கி சாவந்த்
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில்கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில்கானை கைது செய்தனர்.
பின்னர் ஆதில் கானிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் ராக்கி சாவந்த் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. விவாகரத்து பெற்றதை ராக்கி சாவந்த் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினார்.
அப்போது எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூச்சல் போட்டு குத்தாட்டமும் ஆடினார். ராக்கி சாவந்த் குத்தாட்டம் ஆடிய வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.