< Back
சினிமா செய்திகள்
கலங்கிய ஹன்சிகா
சினிமா செய்திகள்

கலங்கிய ஹன்சிகா

தினத்தந்தி
|
19 Oct 2023 7:52 AM IST

ஹன்சிகா செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. கடந்த வருடம் சொஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறார். சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகிறார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் கல்வி உதவிகள் வழங்குகிறார்.

ஹன்சிகாவுக்கு செல்ல பிராணிகளையும் பிடிக்கும். தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இதனால் கலங்கிய ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது மகன் போல் இருந்தாய். உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது'' என்று பதிவிட்டு உள்ளார்.

ஹன்சிகாவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்