< Back
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் - தென்னிந்திய நடிகர் சங்கம்

கோப்புப்படம்

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் - தென்னிந்திய நடிகர் சங்கம்

தினத்தந்தி
|
3 July 2023 2:52 PM IST

தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியுள்ளது என்று தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த இரண்டு சங்கங்களுக்கும் பிரிவினை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில செய்திகள் வெளிவந்திருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தயாரிப்பாளர் சங்கம் 14 நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இடையே இருக்கக்கூடிய சுமூகமான நல்லுறவை கெடுக்கும் வகையில் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. தயாரிப்பாளர்களுடன் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், இது போன்ற நல்லுறவை சீர்குலைக்கும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்