கவர்ச்சி படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி
|கடந்த 2 நாட்களில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களில் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள் உள்ளன.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா பதானி, தற்போது சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார்.
இதுதவிர கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். 'வெல்கம் டு தி ஜங்கிள்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் திஷா பதானி. இந்நிலையில் திஷா பதானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தையே சூடாக்கி இருக்கிறது. அந்தளவு கவர்ச்சியில் திஷா பதானி கிறங்கடித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'இத்தனை அழகை இதுவரை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்?', 'என்ன விலை அழகே?' என்றெல்லாம் திஷா பதானியின் அழகை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
மேலும் கடந்த 2 நாட்களில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களாகவும் திஷா பதானியின் கவர்ச்சி படங்கள் அமைந்து உள்ளன. இதனால் திஷா பதானி உள்ளம் குளிர்ந்து போயிருக்கிறாராம். தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.