< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
|30 July 2024 9:03 AM IST
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் லிப்ரா புரொடெக்சன் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகரில் 19-வது அவென்யூவில் உள்ள ரவீந்தர் வீட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என பாலாஜி என்ற தொழிலதிபரை அணுகி ரூ.16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.