'நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
|இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, ரகுமான், பிரபு, ஆதித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.
2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இதன் டீசர் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.