< Back
சினிமா செய்திகள்
இரு இதயங்கள் ஒன்றிணைந்த தருணம்: எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் மணமக்களை வாழ்த்திய இயக்குநர் விஜய்
சினிமா செய்திகள்

இரு இதயங்கள் ஒன்றிணைந்த தருணம்: எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் மணமக்களை வாழ்த்திய இயக்குநர் விஜய்

தினத்தந்தி
|
26 Aug 2024 4:57 PM IST

எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

சென்னை,

மதராசபட்டணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்..

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.

இந்நிலையில், காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. எமி ஜாக்சனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்தில் இயக்குநர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் சிரிப்புடன் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்