இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்...!
|இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்.ஐ.சி) என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில், 'லவ் டுடே' படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' (எல்.ஐ.சி) என்ற தலைப்பை படத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான - எல்.ஐ.சி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.