நதி படத்திற்காக புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த 'கயல்'ஆனந்தி
|படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் இல்லாமல், ஆனந்தி நடிக்க ஒப்புக்கொண்டதாக டைரக்டர் தாமரை செல்வன் சொல்கிறார்.
'ஏமாளி', 'லிசா' ஆகிய படங்களில் நடித்த சாம் ஜோன்ஸ், 'நதி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இந்தப் படத்தை தாமரை செல்வன் இயக்கியுள்ளார். இவர், டைரக்டர் மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.
படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர், 'கயல்' ஆனந்தி. படத்தை பற்றி டைரக்டர் தாமரை செல்வன் சொல்கிறார்:-
''நதி படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும் நாங்கள் மேற்கொண்ட பயணமே புது அனுபவமாக இருந்தது.
படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் இல்லாமல், ஆனந்தி நடிக்க ஒப்புக்கொண்டார். டைரக்டர் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேல.ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.''