'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா
|‘வாழை’ படத்தை பாராட்டி இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா வாழை படம் பற்றி பாராட்டி பேசியுள்ளார். அதில் "தன் வாழ்க்கையில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தை லட்சக்கணக்கான மக்களின் முன்வைக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். மாரி செல்வராஜுக்கு என்னுடைய பாராட்டுகள். 'வாழை' இந்தியாவின் சினிமா பாரடைசோ" எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இயக்குநர் பாலா, இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் தற்போது இயக்குநர் சுதா கொங்கராவும் படத்தை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.