< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்
|28 March 2024 8:33 PM IST
இயக்குனர் சங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, தனது மூத்த மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.
சென்னை,
பிரபல இயக்குனர் சங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், சங்கரின் உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் இன்று தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்களது மூத்த மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார். ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், திருமணம் பிரம்மாண்ட முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.