< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருப்பதியில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
|24 Jan 2023 8:50 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனரான ஷங்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவரது மகளும், நடிகையுமான அதிதி ஷங்கரும் உடன் சென்றிருந்தார்.
அங்கு அவர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்து வெளியே வந்த ஷங்கருடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.