'இந்தியன் 2' குறித்த புதிய தகவலை வெளியிட்ட ஷங்கர்
|இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறா
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் குறித்த அறிவிப்பை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் லோலா விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விஎப்எக்ஸ் ஹாலிவுட் படமான ஐரிஸ்மேன் மற்றும் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Scanning the advanced technology at Lola VFX LA ✨#Indian 2 pic.twitter.com/816QYA7sCN
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 23, 2023