'மாமனிதன்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு..!
|மாமனிதன் இன்று வெளியாகியுள்ள நிலையில் ,இயக்குனர் ஷங்கர் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
சென்னை,
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ,நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
"மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்தது .. சீனு ராமசாமியின் கிளாசிக் படமாக வந்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதுக்கு தகுதியானது . இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் உணர்வுப்பூர்வமான இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.