< Back
சினிமா செய்திகள்
மாவீரன் படக்குழுவுக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு
சினிமா செய்திகள்

'மாவீரன்' படக்குழுவுக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

தினத்தந்தி
|
15 July 2023 8:14 PM IST

'மாவீரன்' படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'மாவீரன்' திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாவீரன் திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் திறமை சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாஸான சிறந்த பொழுதுப்போக்கு படம்.

சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்! நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்