< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான இயக்குநர் சங்கர் - காரணம் என்ன?
|19 May 2022 9:08 AM IST
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திரைப்பட இயக்குநர் சங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னை,
எந்திரன், சிவாஜி உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு ஒன்றிற்காக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார்.
அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா, சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜரானதை செய்தியாளர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அவர் பின் வழியாக காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மீண்டும் இது தொடர்பாக இயக்குனர் சங்கரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.