'பராரி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
|இயக்குநர் ராஜு முருகன் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
சென்னை,
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. இப்படத்தின் இயக்குநர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
'பராரி' என்ற சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர். திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். 'பராரி' திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் நாளாந்த வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில், 'பராரி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'சாம்பவா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவை இயக்குனர் ராஜு முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.