'சலார்' படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய இயக்குனர் ராஜமவுலி..!
|'சலார்' திரைப்படம் வருகிற 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் வருகிற 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'சலார்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'சலார்' படத்தின் முதல் டிக்கெட்டை பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமவுலி வாங்கியுள்ளார். தயாரிப்பாளர் நவீன் எர்னேனி மற்றும் படக்குழுவிடம் இருந்து ராஜமவுலி டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். இதனை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.