< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இயக்குனர் பி.எஸ்.மித்ரன்- ஆஷாமீரா ஜோடி திருமண நிச்சயதார்த்தம் - திரையுலகினர் வாழ்த்து
|25 Jun 2022 5:08 AM IST
இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கும், செய்தியாளர் ஆஷா மீரா ஐயப்பனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சென்னை,
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பி.எஸ்.மித்ரனுக்கும், செய்தியாளர் ஆஷா மீரா ஐயப்பனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார், மித்ரன்-ஆஷா மீரா ஜோடியை வாழ்த்தியுள்ளார். மேலும் திரையுலகைச் சேர்ந்த பலர் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.