பார்த்திபன் இயக்கியுள்ள 'டீன்ஸ்' படத்தின் 'இக்கி பிக்கி' பாடல் வெளியானது
|பார்த்திபன் இயக்கியுள்ள 'டீன்ஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘இக்கி பிக்கி’ பாடல் யூ-டியூபில் வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஒரு பள்ளியில் படிக்கும் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு குழுவாக காட்டுக்குள் செல்கின்றனர். அந்த காட்டில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள், பேய்கள் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து பயந்த அவர்கள் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். காட்டில் சிக்கிய மாணவர்களின் நிலை என்ன என்பதை திரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் பார்த்திபன் வழங்கியுள்ள படம் தான் 'டீன்ஸ்'.
சமீபத்தில் 'டீன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'இக்கி பிக்கி' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலை இயக்குனர் பார்த்திபனே எழுதியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இந்தியன் -2 வெளியாகும் அதே நாளில் வெளியாகவுள்ளது.