< Back
சினிமா செய்திகள்
இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் சூர்யா
சினிமா செய்திகள்

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் சூர்யா

தினத்தந்தி
|
23 Aug 2024 6:35 PM IST

தங்கலான் படம் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் விக்ரம் , பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி டேனியல் கேல்டகிரோன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் , உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தங்கலான் படம் வெளியாகிய நான்கு நாட்களில் தங்கலான் ரூ.54 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

பா. ரஞ்சித் மீண்டும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே இவர்களது கூட்டணியில் 'ஜெர்மன்' என்ற படம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பது. இப்படம் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்