தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர் நெல்சன்
|இயக்குனர் நெல்சன் 'பிளமெண்ட் பிக்சர்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் , ரஜினியின் ஜெயிலர் போன்ற படங்களை இயக்கி உள்ளார் . இவர்இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் 'பிளமெண்ட் பிக்சர்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"என் 20வது வயதில் மீடியா பொழுதுபோக்கு துறையில் பயணத்தை துவங்கினேன். இத்தனை ஆண்டுகளில் இந்தத் துறையின் பங்களிப்புக்காக நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்துவிட்டேன்.இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கும் ஆசையும் இருந்தது. இன்று, என் சொந்தத் தயாரிப்புநிறுவனமான 'பிளமண்ட் பிக்சர்ஸ்' நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
#Filamentpictures @Filamentpicture pic.twitter.com/WqRDMMtUZV
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) May 1, 2024