< Back
சினிமா செய்திகள்
அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் - இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல்
சினிமா செய்திகள்

'அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும்' - இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல்

தினத்தந்தி
|
28 Dec 2023 3:10 PM IST

விஜயகாந்த் மறைவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன், மிஸ் யு கேப்டன்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்