ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு லேசான காயம்.!
|இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ரசிகர்களால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் கடந்த 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், 'லியோ' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து 'லியோ' படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்த இரண்டு இடங்களுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் 'லியோ'வை ரசித்து கொண்டிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.