< Back
சினிமா செய்திகள்
இனிமேல் ஆல்பம் பாடல்  25-ம் தேதி வெளியாகிறது
சினிமா செய்திகள்

'இனிமேல்' ஆல்பம் பாடல் 25-ம் தேதி வெளியாகிறது

தினத்தந்தி
|
21 March 2024 7:26 PM IST

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' ஆல்பம் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் ' 'இனிமேல்' ஆல்பம் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகும் ' என பதிவிட்டுள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன், எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற சுயாதீன ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீஸரில் லோகேஷ் - ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி தெறிக்க விடும் விதமாக இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் ஸ்ருதியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் என அவரது நடிப்பு அவதாரத்தை பலர் புகழ்ந்து வருகிறார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் பக்கத்தில் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்