< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
|17 Oct 2023 10:23 PM IST
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, பின்னர் கோவிலில் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார்.
அண்மையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்கள் குழுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.