விஜயின் 'தளபதி 67' அப்டேட் தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
|விஜயின் ‘தளபதி 67’ அப்டேட் குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.
சென்னை
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமர்சையாக ரசிகர்களின் கொண்டாடி வருகின்றனர். இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது நிறைய திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
அந்த வகையில் விஜய்யின் வாரிசு படத்தைப் திரைப் பிரபலங்கள் திரிஷா, கீர்த்தி சுரேஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் திரையரங்கில்ச் என்று பார்த்தனர்.
சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த லோகேஷ் பின்பு செய்தியாளர்களிடம், "படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப என்ஜாய் பண்ணி பாத்தேன்" என்றார்.
அப்போது தளபதி 67 படத்தைப் பற்றி கேட்கையில், "இன்றுதான் வாரிசு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அப்டேட் வரும். விரைவில் தேதியை வெளியிடுவோம்" எனக் கூறினார்.
எனவே விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
வாரிசு படக்குழுவினர், இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்துள்ளனர். அப்போது காட்சி முடிந்த பிறகு அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர். அப்போது தமன், ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து கண் கலங்கி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் திரையரங்கிற்கு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய வம்சி, "எங்கள் அனைவருக்கும் ஒரு எமோஷ்னலான தருணம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் எல்லாருக்கும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் நன்றி" என்றார்.