< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

தினத்தந்தி
|
12 Nov 2023 3:53 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரையரங்குளில் வெளியாகியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை,

ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிட்டிருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் தீபாவளி விடுமுறையையொட்டி திரையரங்குகளில் வெளியாகியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'கடவுளுக்கும், யானைகளுக்கும், இயற்கைக்கும், ரசிகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்