< Back
சினிமா செய்திகள்
லால் சலாம் படக்குழுவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
சினிமா செய்திகள்

'லால் சலாம்' படக்குழுவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு

தினத்தந்தி
|
9 Feb 2024 7:40 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படக்குழுவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 'லால் சலாம்' படக்குழுவுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லால் சலாமில், மொய்தீன் பாயாக தலைவரை பார்ப்பது சூப்பர் ட்ரீட். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தைக் காட்டும் இந்தக் கதையைச் சொன்னதற்காக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்