விஜய்யை வைத்து நிச்சயம் படம் எடுப்பேன் - டைரக்டர் ஹரி
|“வருங்காலத்தில் விஜய்யை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன்” என்றார் டைரக்டர் ஹரி.
விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிய ஹரி, முதன்முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கிய படம் `யானை'. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரியிடம், 'உங்கள் இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு ஹரி பதில் அளிக்கையில், "விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. அவரை நிறைய தடவை சந்தித்து இருக்கிறேன். பல கதைகளையும் கூறியிருக்கிறேன். சில முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனாலும் வருங்காலத்தில் விஜய்யை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன்" என்றார்.
பொதுவாகவே ஹரி இயக்கும் படங்கள் விறுவிறுப்பான காட்சிகள், வேகமான கதைக்களம், கொஞ்சம் காதல், நிறைய சென்டிமென்ட், பஞ்ச் வசனங்கள் கொண்டதாக இருக்கும். எனவே ஹரி படத்தில் விஜய் நடித்தால் அந்தப் படம் இன்னும் எப்படி பரபரப்பாக நகரும்? என்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களாக பதிவிட்டு வருகிறார்கள்.