< Back
சினிமா செய்திகள்
டைரக்டர் கவுதமன் படத்தின் பெயர் மாற்றம்
சினிமா செய்திகள்

டைரக்டர் கவுதமன் படத்தின் பெயர் மாற்றம்

தினத்தந்தி
|
14 July 2023 1:23 PM IST

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'மாவீரா' என்ற பெயரில் புதிய படம் தயாராவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை வ.கவுதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் மாபியா கும்பலோடு கவுதமன் மோத இருக்கும் சண்டை காட்சிக்காக, ஸ்டன்ட் சில்வா மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து தினமும் மூன்று மணிநேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட சண்டை பயிற்சிகள் கற்று வருகிறார்.

இந்த நிலையில் 'மாவீரா' என்ற தலைப்பை 'மாவீரா படையாண்டவன்' என்று மாற்றி இருப்பதாகவும், அனைத்து வயதினரும் கொண்டாடும் அதிரடி ஆக்ஷன் படமாகவும், தமிழ் திரையுலகில் மாபெரும் பேரதிர்வை உருவாக்கும் படமாகவும் இது இருக்கும் என்றும் கவுதமன் தெரிவித்து உள்ளார். இசை: ஜி.வி.பிரகாஷ், பாடல்: வைரமுத்து, வசனம்: பாலமுரளி வர்மன்.வி.கே.புரொடக்ஷன் தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்