< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி
சினிமா செய்திகள்

இயக்குனர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
28 July 2022 3:04 PM IST

இயக்குனர் ஜி. எம். குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

1986-ம் ஆண்டு சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் பிரபு கதாநாயகனாக நடித்த 'அறுவடை பூக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்ட ஜி.எம்.குமார், 'பிக்பாக்கெட்', 'இரும்புப் பூக்கள்', 'உருவம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து ஜி.எம்.குமார் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்', பாலா இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன்' உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் தற்போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்