நலம் பெற்று வருகிறேன், விரைவில் சந்திப்போம்.. இயக்குநர் பாரதிராஜா
|இயக்குநர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை:
தமிழ் சினிமாவின் இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் திடீரென கடந்த 23ஆம் தேதி நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று டாக்டர் நடேசன், கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்தினரின் ஆலோசனை படி தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை, கணிவான கவனிப்பால் நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம்.
விரைவில் பூரண நலம்பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். விரைவில் சந்திப்போம் என கூறியுள்ளார்.