< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாலா அடிப்பார்.. நடிகை கூறிய பரபரப்பு தகவல்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாலா அடிப்பார்.. நடிகை கூறிய பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
29 Feb 2024 10:41 AM IST

அருண் விஜய் நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் உருவாகியுள்ளது.

சென்னை,

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.

இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது. வணங்கான் படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்துள்ளது.

இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, "வணங்கான் படப்பிடிப்பில் பாலா தன்னை தோள் பட்டையில் அடித்தார்" என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை மமிதா பைஜூ கூறுகையில்,

"வணங்கான் படத்தில் முதலில் நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக் கொண்டேன். ஆனால், இயக்குநர் பாலா, அதை உடனே செய்து காட்டும்படி கூறினார். நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அப்போது, எனக்கு பின்னால் இருந்த பாலா எனது தோள்பட்டையில் அடித்தார். நான் அவ்வபோது திட்டுவேன். அப்போது பெரிதா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர் கூறுவார். சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் எனக்குதான் அது புதிதாக இருந்தது" என்றார்.

மேலும் செய்திகள்