< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மல்யுத்த வீரர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு
|1 Jun 2023 2:50 PM IST
மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சென்னை,
டெல்லியில் நடைபெற்றுவரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் அடக்குமுறைக்கு ஆளானதாக கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பா.ரஞ்சித் பதிவிட்டு உள்ளார்.
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய வீரர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்து, தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.