< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாமி தரிசனம்
|29 Oct 2023 2:35 AM IST
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24-ந்தேதி திருப்பவித்ர உற்சவம் தொடங்கியது. இந்த விழாவின் இறுதி நாளான நேற்று கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ், கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி சாமி பல்லக்கை சுமந்து வந்து முருகதாஸ் வழிபாடு செய்தார்.