< Back
சினிமா செய்திகள்
நடிகர் நிதினை சாடிய டைரக்டர்
சினிமா செய்திகள்

நடிகர் நிதினை சாடிய டைரக்டர்

தினத்தந்தி
|
14 July 2022 2:33 PM IST

நிதின் பெரிய நடிகர் ஆகி விட்ட கர்வத்தில் தன்னை அவமதித்து விட்டதாக டைரக்டர் அம்மா ராஜசேகர் கூறியுள்ளார்.

தெலுங்கில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவரை சென்னையை சேர்ந்த பிரபல நடன இயக்குனரும், நடிகரும், தெலுங்கில் சில படங்களை டைரக்டு செய்துள்ளவருமான அம்மா ராஜசேகர் கடுமையாக சாடி உள்ளார்.

இவர் இயக்கி தயாரித்துள்ள ஹை பைவ் என்ற தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் அம்மா ராஜசேகர் பேசும்போது, ''எனது பட விழாவுக்கு வரும்படி நிதினுக்கு அழைப்பு விடுத்தேன். வருகிறேன் என்று உறுதியளித்தவர் பின்னர் தனக்கு காய்ச்சல் என்று பொய் சொல்லி வராமல் இருந்து விட்டார். படத்தை வாழ்த்தி பேசி ஒரு வீடியோ வெளியிட கேட்டும் செய்யவில்லை.

சினிமாவுக்கு வந்த புதிதில் நிதினுக்கு நடனம் தெரியாது. அவருக்கு நான்தான் நடனம் சொல்லி கொடுத்தேன். நான் அவருக்கு குருவாக இருந்தும் மதிக்கவில்லை, நிதின் பெரிய நடிகர் ஆகி விட்ட கர்வத்தில் என்னை அவமதித்து விட்டார். குருவுக்கு மரியாதை கொடுக்காத நீங்கள் சூப்பர் ஸ்டார் நடிகர் ஆகமுடியாது. உங்களை நம்பி நான் ஏமாந்து விட்டேன்" என்றார்.

முன்னணி நடிகரை இயக்குனர் பொது நிகழ்ச்சியில் சாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்