வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
|சபரீஷ் நந்தா இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.
சென்னை,
ஐரா, நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டாரில் வெளியான 'வி ஆர் பிரெக்னன்ட்' என்ற தொடரை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் புதிய படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்பான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும், சுனி, அனிகா சுரேந்திரன், நடன இயக்குனர் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.