< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா' படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
|16 Feb 2024 10:02 AM IST
இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சென்னை,
இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், வருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.