< Back
சினிமா செய்திகள்
தினேஷின் புதிய படம்
சினிமா செய்திகள்

தினேஷின் புதிய படம்

தினத்தந்தி
|
8 Feb 2023 8:01 AM IST

தினேஷ் அடுத்து ‘தண்டகாரண்யம்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கிய 'அட்ட கத்தி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள தினேஷ் அடுத்து 'தண்டகாரண்யம்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.

பா.ரஞ்சித் நீலம் புரொடக் ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி ஏற்கனவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் நடிக்கும் படத்தை அதியன் ஆதிரை டைரக்டு செய்கிறார். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் இவர்தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, ரின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி ஆகியோரும் தினேசுடன் நடிக்கின்றனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்