'மகாராஜா'- விஜய் சேதுபதி இல்லை... இவர்தான் நடிப்பதாக இருந்ததாம்?
|'மகாராஜா' படம் வெளியாகி ஒரு வாரமானநிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆனநிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியும் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். பேஷன் ஸ்டுடியோவிற்கு கதையை கூறிய நித்திலன் சாமிநாதன், தொடர்ந்து தனஞ்செயனுக்கும் கதையை கூற அவருக்கு கதை பிடித்துபோய் விஜய் ஆண்டனியிடம் கூறியுள்ளார். உடனே அவரும் விருப்பம் காட்ட ஒப்பந்தத்தில் கையெலுத்திட கூறியுள்ளார். பின்னர் சில காரணங்களால் அது நடக்காமல்போக இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்ததாக கூறப்படுகிறது.