ஸ்ரீ தேவியை ஒருதலையாக காதலித்தாரா ரஜினி? காதலை கூறாதது ஏன்?
|நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ தேவியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். ஆனால், இவரும் நடிகை ஸ்ரீ தேவியும் ஒன்றாக நடித்த படங்கள் அதிகமாக கொண்டாடப்பட்டன. இவர்கள் இருவரும் ஒன்றாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 19 படங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான முதல் படம் மூன்று முடிச்சு. இந்த படத்தில் ஸ்ரீ தேவியை ரஜினி ஒருதலையாக காதலித்து இருப்பார். காலபோக்கில் இருவரும் ஒன்றாக படம் நடிக்க ரஜினிகாந்துக்கு ஸ்ரீ தேவி மீது காதல் மலர்ந்ததாக தெரிகிறது.
ஒருதலையாக காதலித்து வந்த ரஜினிகாந்த், ஒருமுறை ஸ்ரீ தேவியிடன் திருமணம் குறித்து கூற முடிவெடுத்து அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்திருக்கிறார். அப்போது ஸ்ரீதேவியின் கிரகப்பிரவேச விழாவிற்கான அழைப்பு வந்திருக்கிறது. அந்த விழாவிற்கு ரஜினியும், கே. பாலசந்தரும் சென்றுள்ளனர். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீடு இருளில் மூழ்கியது.
இதை ஒரு கெட்ட சகுனமாக பார்த்த ரஜினிகாந்த், தனது திருமணம் பற்றி பேசாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஸ்ரீதேவி மீதான காதல் நிறைவேறாத போதிலும், ரஜினிகாந்த் அவருடன் நட்பை பேணி வந்தார்.